முதலமைச்சரைப் பதவிநீக்கும் போராட்டம் தொடரும். நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. அது முடியாமல் போனால் இரண்டாவது தெரிவைப் பிரயோகித்து முதலமைச்சர் விக்கினேஸ்வரனைப் பதவியிலிருந்து அகற்றுவோம் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு தொடர்பில் இன்று மாட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் ஊடகவியலாளர்களைச் சந்த சயந்தன் மேலும் தெரிவிக்கையில்,
முதலமைச்சரைப் பதவிநீக்குவதற்கு நாங்கள் மூன்று வழிமுறைகளை வைத்திருக்கின்றோம். அதன் ஒரு வழிமுறைதான் பிரயோகிக்கப்பட்டுள்ளது. அது நம்பிக்கையில்லாத் தீர்மானம். அதில் தோல்வியடைந்தால் இன்னமும் இரண்டு வழிமுறைகள் உள்ளது.
ஆனாலும் கூட எமக்கு சாதகமான முறையில் சமரசத்திற்கான நம்பிக்கை ஒளிக்கீற்றுத் தென்பட்டால் அதனைப் பற்றிப் பிடித்துக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமை பெற்ற உறுப்பினரா? அவர் உறுப்புரிமைப் படிவம் நிரப்பிக் கொடுத்திருந்தாரா என ஊடகவியலாளர்களால் கேள்விகள் கேட்கப்பட்டபோது அதற்கு பதிலளிப்பதிலிருந்து தவிர்த்து கேள்விக்கு சம்பந்தமில்லாது பதிலளித்துக்கொண்டிருந்தார். ஒன்றைமட்டும் கூறுங்கள் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழரசுக் கட்சியின் உறுப்புரிமை பெற்ற உறுப்பினரா? இல்லையா என என ஊடகவியலாளர் ஒருவர் மீண்டும் அழுத்தமாகக் கேட்டபோது ஊடக சந்திப்பை முடித்துக்கொள்வதாக அவர் எழுந்து சென்றுவிட்டார்.
0 comments:
Post a Comment