10 வது இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் இன்று கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.இம்முறை IPL போட்டிகளுக்கு தனியாக ஆரம்ப விழா இடம்பெறாது,போட்டி இடம்பெறும் 8 நகரங்களிலும் ஆரம்ப விழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் சச்சின், சேவாக், கங்குலி, லக்ஸ்மன் ஆகிய 4 பேரும் விழாவில் கலந்து சிறப்பு கௌரவத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என வர்ணிக்கப்படும் டிராவிடடும் ,இந்திய கிரிக்கெட் சபையின் கௌரவிப்பு பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.
ஆயினும் டிராவிட் இந்த ஆரம்ப நிகழ்விலும், கௌரவிப்பிலும் கலந்துகொள்ளாதது ஏன் என்று எல்லோரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
போட்டி இடம்பெறும் ஹைதாராபாத் நகருக்கும், டிராவிட் தங்கியுள்ள டெல்லிக்கும் இடையில் இருமணிநேர விமானப் பயணம் என்று சொல்லப்படுகின்றது.
டெல்லியில் இன்றைய காலநிலையும், இடியுடன் கூடிய மழையும் பொழிந்துவரும் காரணத்தால், விமானப் பயணம் தாமதமானதால்தான், டிராவிட்டால் இந்த முக்கிய நிகழ்வில் பங்கெடுக்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிராவிட் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கு வேறு எதுவிதமான காரணங்களும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment