விவசாயம், தண்ணீர் பஞ்சம் மற்றும் பல அடிப்படை பிரச்னைகளால் சிக்குண்டிருக்கும் ஒரு கிராமத்தில், கலெக்டர் நயன்தாரா எவ்வாறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்ற கதைக்களத்தைக் கொண்டதுதான் 'அறம்' திரைப்படம். தொடர்ச்சியாக, லீட் ரோலில் பலதரப்பட்ட படங்களில் நடித்துவரும் நயன்தாரா இதிலும் கலக்குவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்த டீசரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டார். ஜிப்ரான் இந்த திரைப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அறம் திரைப்படத்தின் இயக்குநர் கோபி நயினார். விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வந்த 'கத்தி' திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று கோபி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment