கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிகமுக்கியமானதாக கருதப்படும் விருதான விஷ்டன் விருதை விராட் கோஹ்லி வென்று வரலாறு படைத்துள்ளார்.
அண்மைய நாட்களில் அவரது திறமைகளைக் கருத்தில் கொண்டே இந்த விருதுக்கு கோஹ்லி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.டெஸ்ட் போட்டிகளில் 75 , ஒருநாள் போட்டிகளில் 92 , T20 போட்டிகளில் 106 எனும் சராசரியை கோஹ்லி இந்த பருவகாலத்தில் கொண்டிருந்தார்.
இதன்காரணத்தால் அவர் விஷ்டன் சஞ்சிகையின் ‘ஆண்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்’ விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2008 , 2009 ம் ஆண்டுகளில் விரேந்தர் சேவாக்கும் , 2010 ம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கரும் இந்த கௌரவத்தைப் பெற்றுக்கொண்ட இந்திய வீரர்களாவர்.
அதேபோன்று மகளிர் பிரிவில் ‘ஆண்டின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனை’ விருதுக்காக ஆஸ்திரேலியாவின் மகளிர் வீராங்கனை எல்லிஸ் பேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் மதிப்புமிக்க விஷ்டனின் 5 வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் தலைவர் மிஸ்பாஹ் , யூனுஸ் கான், இங்கிலாந்தின் சகலதுறை வீரர் கிரிஸ் வோக்ஸ் , 22 வயதான இளம் வீரர் பென் டக்கட் ,ரோலண்ட் ஜோன்ஸ் ஆகியோரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
கிரிக்கெட் வீரர்கள் வாழ்வில் அவர்களுக்கு கிடைக்கும் மிகமுக்கியமான கௌரவமாக ‘விஷ்டன் விருது’ காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment