திருவுடல் திரு இரத்த பெருவிழாவை சிறப்பிக்கும் விசேட திருப்பலியும் நற்கருணை பவனியும் (18) ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது .
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலயத்தில் திருவுடல் திரு இரத்த பெருவிழா விசேட திருப்பலி அருட்தந்தை பிறைனர் செலர் அடிகளாரினால் ஒப்புகொடுக்கப்பட்டு திருப்பலியை தொடர்ந்து நற்கருணை பவனி இடம்பெற்றது
இந்த நற்கருணை பவனியானது இருதயபுரம் தி தொடர்ந்து நற்கருணை பவனியும் ரு இருதயநாதர் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி பவனியாக நற்கருணை பேழை எடுத்து செல்லப்பட்டு கருவப்பகேணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி சிற்றாலயத்தில் வைக்கப்பட்டு விசேட ஜெப ஆராதணை நடைபெற்றது .
ஆராதனையை தொடர்ந்து நற்கருணை பேழை பவனியாக கருவப்பங்கேணி புனித வனத்து அந்தோனியார் ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆலயத்தில் விசேட ஜெப வழிபாடும் ,மறைவுரைகளும் தொடர்ந்து நற்கருணை ஆராதனையும் நடைபெற்றது
திருவுடல் திரு இரத்த பெருவிழா மற்றும் நற்கருணை பவனியில் பங்கு தந்தை லெஸ்லி ஜெயகாந்தன் ,அருட்தந்தை பிரைனர் செலர் , சிறிய குரு மட அருட்தந்தை மொறாயஸ் ஆகியோருடன் இருதயபுரம் , கருவப்பங்கேணி ,காந்தி கிராமம் மக்கள் கலந்து சிறப்பித்தனர் .
0 comments:
Post a Comment