பாகுபலியில் வரும் காளகேயர்கள் யார்?
குடும்ப வரலாற்றில் பொன்னியின் செல்வனில் வரும் சுந்தரச் சோழர் வரலாறு (அமரேந்திர பாகுபலியின் அப்பா சுந்தரச் சோழன் என்ற பாயிண்டில் ஃபிக்ஸ் செய்து கொண்டு யோசித்தால் புரியும்) ,
பனை மர நெருப்புப் பந்து விசயத்த்தில் காந்தளூர்ச் சாலை வரலாற்று நாவல், பதவியை காதலுக்காக விட்டுக் கொடுப்பதில் சேரமான் காதலி , குந்தளூர் அமைப்பில் யவன ராணி, , கப்பல் மேகம் போல பாயும் விவரிப்பில் கடல் புறா, சிவகாமி கதாபாத்திரத்தில் சங்க கால தன்மைகள் …
இப்படி வரலாறு மற்றும் கற்பனையின் இணைப்பில் உருவான தமிழின் சிறந்த காவியங்களை எல்லாம் சுருட்டி விழுங்கி விட்டு வந்திருக்கிறது பாகுபலி .
சொன்னா.. ”விடுங்க அவனாச்சும் எடுத்துக் காட்டினானே . சந்தோசம்” என்கிறார்கள் . சரி விட்டுடுவோம்
ஆனா பலவால் தேவன் அரசராக பதவி ஏற்கும் காட்சியில் மகிழ்மதியின் எல்லைகளை கூறுவார்கள் ஞாபகம் இருக்கா?
”’மேற்கே மலபார் சமுத்திரத்தாலும் கிழக்கே உதயகிரி மலைகளாலும் வடக்கே குந்தள நதிகளாலும் தெற்கே காளகேய கிராதிகளாலும் சூழப்பட்ட மகிழ்மதி தேசம்…..”
மலபார் சமுத்திரம் என்பது கர்நாடகா மற்றும் வட கேரளாவின் மேற்குக் கடல் . உதயகிரி மலை என்பது இன்றைய ஆந்திராவின் மையப்பகுதியில் இருந்து ஒரிஸ்ஸா வரை நீளும் பகுதி, ..
ஆக, அவர்கள் சொல்லும் மகிழ்மதி தேசம் என்பது இன்றைய கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஆந்திராவின் மேற்குப் பகுதியைக் கொண்டது .
அப்பா தெற்கே காளகேய கிராதிகள்னு யாரைச் சொல்றாங்க .
நம்மளதாங்கோ . தமிழ்நாட்டைத்தான் .தமிழர்களான நம்மைதான் .
ரெண்டு பாகத்துலயும் காளகேயரகளை எப்படி காட்டுனாங்க . ஞாபகம் இருக்கா ? முகத்துல சுண்ணாம்பும் கரியும் பூசிக்கிட்டு , மண்டை ஓட்டை மாலையா போட்டுக்கிட்டு …
நமக்கு ஏது மொழி ? நம்ம மொழி முந்தா நாள்தானே உருவாச்சு . அதான் லல்லச்ச ப்லல்லல்ல ப்ர்ர்ர பச்ச்ச்ச களக்சச்சச்சன்னு பேசிக்கிட்டு அப்படி இருந்தோமாம்.
ஆனா அப்பவே அவங்க பிரபாசாவும் ரானாவாகவும் அனுஷ்காவாகவும் தமன்னாவாகவும் இருந்தாங்களாம் .
எப்புடி கதை ( அவங்க கணக்குப்படி பார்த்தா பிரபாசும் ரானாவுமே காளகேயர்கள்தான் என்பது வேற விஷயம்)
இவனுகளுக்கு கதை அமைக்க தமிழ நாட்டின் வரலாற்றில் உள்ள நிகழ்வுகளும் தமிழ் படைப்புகளில் உள்ள அழகியல் பதிவுகளும் வேணும் .
அவ்வளவு ஏன் ? அரண்மனைன்னு காட்ட ரெபரன்ஸ்க்கே நம்ம கங்கை கொண்ட சோழ புரம் அரண்மனைதான் வேணும் . ஒருத்தன் வீரனா இல்லையான்னு முடிவு பண்ண ஏறு தழுவுதல்தான் வேணும் .
ஆனா நாம காளகேயர்கள்.
இன்னொரு விஷயம் .
‘யோவ் ஆர்தர் காட்டன் . அந்த காட்டு மிராண்டி தேசத்துல என்ன இருக்குன்னு பாத்துட்டு வாய்யா’ன்னு இங்கிலாந்து அரசியால் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அன்றைய இங்கிலாந்து அரசின் தலைமை எஞ்சினியர் ஆர்தர் காட்டன் இந்தியா முழுக்க சுத்தி வந்தாரு .
அவர் அதிசயித்து ஆச்சர்யப்பட்டு ஆடிப் போனது ரெண்டே விசயத்திலதான் .
ஒண்ணு கல்லணை கட்டப்பட்ட்ட விதம் .
இன்னொன்னு வைகை நதி நீரை கடலுக்கே அனுப்பாம நீர்க் கண்ணி வாய்க்கால்கள் மூலம் நிலத்துலயே ஊற விட்டு ராமநாதபுரம் சக்கரக் கோட்டை கண்மாய்வரை அனுப்பிய அறிவு .
அப்போ இந்தியான்னா பாம்பாட்டிகள் தேசம்னு இங்கிலாந்துல சொல்வாங்க .
ஆனா ஆர்தர் காட்டன் அங்கே போய் சொன்னாராம் . நீங்க சொல்றது எல்லாம் வடக்குலதான். The people of southern part of india are more civilisized than us அப்படின்னு .
கரிகாலன் கட்டிய கல்லணைக்கு அவர்தான் grand anaicut என்று பெயர் வச்சாரு . ”இந்தியாவுலயே இதை விட பல பெரிய அணைகள் இருக்கும்போது இந்த அணைக்கு ஏன் கிராண்ட் அணைகட் னு பேரு வைக்கறீங்க என்று கேட்டப்ப அவரு சொன்னார்.
”yes it is the grand anaicut . grand.. not by size; but by technology
அப்படி ஓர் அணையை கட்டியது எவ்வளவு அறிவார்ந்த சமூகமா இருக்கும்?
அப்போ அந்த அரசன் எப்படி இருந்து இருக்கணும் .
ஆனா பாகுபலி படத்துல அதே பல்வால் தேவன் முடி சூடும் காட்சியில் கட்டப்பாவை அறிமுகப் படுத்தும் போது என்ன சொல்றாங்க கவனிச்சீங்களா ?
கரிகால கட்டப்பா !
எது ?
கரிகால வம்சம் மகிழ்மதிக்கு பரம்பரை பரம்பரையா அடிமையா இருக்க எழுதிக் கொடுத்தாங்களாம் .
ராஜமவுலி அன் கோ வுக்கு எவ்வளவு இன்டல்லக்சுவல் அர்ரகன்ஸ் பாருங்க .
பாகுபலி கற்பனைக் கதைதானே . லூஸ்ல விடுங்க என்று தோன்றலாம்
கரிகால் சோழனும் ராஜ ராஜ சோழனும் நிஜ வரலாறுகள் . ஒரு கற்பனைக் கதைக்கு ஒரு நிஜ வரலாற்றை திருடிக் கொண்டதோடு அதை விட சிறந்த இன்னொரு வரலாற்றை அடிமை என்று கூறி அடையாளப்படுத்த எவ்வளவு வக்கிரம் வேணும்
காசு கிடைக்குது என்பதால இதை எல்லாம் தமிழில் எழுதி கொடுத்து இங்கேயே ஓட்டும் ஆளை என்ன செய்வது .
ருத்ரமாதேவி படத்துலயும் கூட இப்படி……. சரி வேணாம் . ரொம்ப பெருசாயிடும் !
ஒன்னு பண்ணலாம் தமிழர்கள் பாகுபலி பார்க்கப் போகும்போது எல்லாம் ”லல்லச்ச ப்லல்லல்ல ப்ர்ர்ர பச்ச்ச்ச களக்சச்சச்ச”ன்னு காளகேய பாஷை பேசினா ராஜ மவுலி அன் கோ ரொம்ப சந்தொஷப் படும்
இதோ இதை எழுதும் இந்த நிமிடம், வங்காளப் பள்ளிகளில் இனி வங்காள மொழி கட்டாயம் என்ற செய்தி காதில் விழுது . ஆனா நம்ம பிள்ளைகளுக்கு நம்ம மொழியும் தெரியாது .வரலாறும் தெரியாது .
அந்த தைரியம்தான் இதை எல்லாம் எழுதி பேச பேச விட்டு , அதை ஸ்பீக்கர்ல டி டி எஸ் ல நம்மையே கேட்க வைக்கிறான்.
0 comments:
Post a Comment