மேஷம்: நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
ரிஷபம்: தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்
பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பழைய சொத்து சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.
மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும். விலகிச் சென்றவர்கள் உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
கடகம்: மாலை 5.15 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.
சிம்மம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். மாலை 5.15 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
கன்னி: குடும்பத்தில் உள் ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். சொந்த-பந்தங்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.
துலாம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். உடன் பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப் பார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். வாகனப் பழுது நீங்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர் களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.
தனுசு: மாலை 5.15 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உறவினர்கள், நண்பர்களுடன் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
மகரம்: பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிக மாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மாலை 5.15 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.
கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். திடீர் யோகம் கிட்டும் நாள்.
மீனம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.
0 comments:
Post a Comment