கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து அப்பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மேற்படி ஆர்ப்பாட்டத்தில், பட்டப்படிப்பினை சரியான நேரத்தில் நிறைவு செய்ய வேண்டும் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரீ.வி. கமராக்கள் உடனடியாக அகற்றப்படல் வேண்டும் என்பன உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை உள்ளடக்கி இடம்பெற்றிருந்தது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அனத்துப் பீடங்களையும் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் தமது கோரிக்கைகளடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் விடுதிப் பகுதியிலிருந்து புறப்பட்டு பிரதான வீதியோரம் நின்று தமது கோஷங்களை எழுப்பியதுடன் நிர்வாகக் கட்டடத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
‘குறிப்பிட்ட கால எல்லைக்குள் பட்டப்படிப்பினை பூர்த்தியாக்கு, மஹாபொல புலமைப்பரிசில் பிரச்சினையை உடனே நிவர்த்தி செய், பொய்யான தீர்வுகள் வேண்டாம் விடுதிப்பிரச்சினையை உடனடியாக நிவர்த்தி செய், அசாதாரணமான வகுப்புத் தடையை நீக்கு, மாணவர்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் சீ.சீ.ரி.வி. கமெராக்களை உடனே அகற்று’ போன்ற வாசகங்களைக் கொண்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.





0 comments:
Post a Comment