புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த கொடியேற்ற நிகழ்வு!


மட்டக்களப்பு புளியந்தீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின்  வருடாந்த திருவிழா (04) மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருத்தலமான புனித அந்தோனியார்  திருத்தலத்தின்   வருடாந்த திருவிழா (04) ஞாயிற்றுக்கிழமை பங்குத்தந்தை இன்னாசி ஜோசப்  அடிகளாரின் தலைமையில்   கொடியேற்ற நிகழ்வும் தொடர்ந்து  திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது

எதிர்வரும் திங்கட்கிழமை (12)   மாலை புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனியும் தொடர்ந்து  செவ்வாய்கிழமை (13)  காலை திருவிழா கூட்டுத்திருப்பலி மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை தலைமையில் ஒப்புகொடுக்கப்படவுள்ளது

திருவிழா கூட்டுத்திருப்பலியை தொடர்ந்து கொடியிறக்கப்பட்டு  புனித அந்தோனியார் திருத்தலத்தின்  வருடாந்த திருவிழா நிறைவுபெறவுள்ளது.








Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment