இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் வரலாற்று முக்கியத்துவமான வெற்றிக்கு மிக சிறப்பாக துடுப்பாட்ட பங்களிப்பு நல்கிய குசல் ஜனித் பெரேராவும் உபாதையால் அவதிப்பட்டு வருகின்றார்.
நேற்றைய போட்டியில் 47 ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்த வேளையில் உபாதை காரணமாக குசல் பெரேரா மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார்.
இந்தநிலையில் குசல் பெரேரா இன்றைய நாளில் கதிரியக்க பரிசோதனைக்கு உட்படுத்தபடவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிலவேளைகளில் இவரது உபாதை காரணமாக, போட்டி தொடரில் பங்கெடுக்க முடியாது போக்குமாயின் அவருக்கு பதிலாக அணியில் தனஞ்சய டி சில்வாவை இணைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
அணியில் மேலதிக வீரர்களாக ஏற்கனவே டில்ருவன பெரேரா, தனுஷ்க குணதிலக ஆகியோர் அணியில் இடம்பெற்றிருந்த நிலையில் தனுஷ்க குணதிலக ,கப்புகெதரவின் காயம் காரணமாக 15 பேர் கொண்ட அணியில் இடம்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment