“யு.எஸ். ஹோட்டல் சதித்திட்டம்” எனக் கூறப்படும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான சதித்திட்டம் ஒன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர்கள் சிலரால் முதலமைச்சருக்கு எதிராகத் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் இச் சதித்திட்டம் தொடர்பில் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் சதித்திட்டத்தில் பங்காளியாக இணையுமாறு அழைக்கப்பட்ட மாகணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தினால் 15.01.2017 அன்று அறிக்கை கையளிக்கப்பட்டிருந்தது. எனினும் குறித்த அறிக்கையினை விசாரணைக் குழு கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்பட்டது. இந்நிலையில் குறித்த சதித்திட்டம் தெடர்பிலான அறிக்கை இன்று அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் முதலமைச்சரை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஒன்றரை வருடங்களிற்கு முன்னரே தமிழரசுக் கட்சியினர் சதித்திட்டம் தீட்ட முனைந்தமை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
சதித்திட்டம் குறித்த விபரங்கள் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment