இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!


ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைப் படுகொலைச் சம்பவம் தொடர்பான 6 சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் எதிர்வரும் ஜுன் மாதம் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் மேலதிக நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில், ஏறாவூர் சுற்றுலா நீதவான் மன்றில் இன்று (09) இவர்களை ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவர்களுக்கான விளக்கமறியலை நீடித்துள்ளார்.

ஏறாவூர், முகாந்திரம் வீதிக்கு அருகில் அமைந்துள்ள தங்களின் வீட்டில் வசித்துவந்த தாயான நூர் முஹம்மது ஹுஸைராவும் (வயது 56) அவரது திருமணமாகிய மகளான முஹம்மது யூசுப் ஜெஸீரா பானுவும் (வயது 32) கொலை செய்யப்பட்ட நிலையில் அவரிகளின் சடலங்கள் கடந்த வருடம் செப்டெம்பர் 11 ஆம் திகதி மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment