இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நேற்றைய தினம் இடம்பெற்ற குழு நிலைப் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்திருந்தது. இலங்கை அணி களத்தடுப்பின் போது அதிக நேரத்தினை செலவு செய்ததாக குற்றம் சுமத்தி போட்டியின் மத்தியஸ்தர் இலங்கை அணித்தலைவராக நேற்று கடமை புரிந்த உபுல் தரங்கவிற்கு இரு போட்டிகளில் விளையாடத் தடை விதித்துள்ளார். அந்த வகையில் அடுத்து நடைபெறவுள்ள இந்திய மற்றும் பாகிஸ்தான் போட்டிகளில் தரங்க விளையாடமாட்டார்.
அஞ்சலோ மத்யூசிற்கு ஏற்பட்ட காயத்தினாலேயே உபுல் தரங்க தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்தார். அடுத்த போட்டிகளில் மத்யுஸ் விளையாடுவாரா இலையா என்பதனை இதுவரை இலங்கை அணி தெரிவிக்கவில்லை. மத்யூஸ் விளையாடாத பட்சத்தில் யார் இலங்கை அணித் தலைவராக விளையாடப் போகிறார்கள் என்பது கேள்விக் குறியே!!
0 comments:
Post a Comment