ஈரான் தலைநகர் தெக்ரானில் உள்ள பாராளுமன்றத்தின் மீது இன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது. இன்று காலை பாராளுமன்றத்தின் மீது அடையாளம் தெரியாத மூன்று பேர் திடீரென மேற்கொண்ட தாக்குதலி தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இதேநேரம் தெக்ரானில் உள்ள மெட்ரோ சுரங்க புகையிரத நிலையம் அருகே மறைந்த புரட்சியாளரும் மதகுருவுமான அய்துல்லா கொமெய்னியின் கல்லறை மாடத்திலும் தற்கொலை தீவிரவாதி ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இரண்டு தாக்குதல்களின் போது பாதுகாப்பு படையைச் காவலர்கள் உட்பட பலர் உயிரிழந்ததுடன் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment