வடக்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக கே.ஈ.ஆர்.எல்.பெர்னாண்டோ காங்கேசன்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
குறித்த நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) சர்வமத தலைவர்களின் ஆசிர்வாதத்துடனும் பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதையுடனும் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில், வடக்கு மாகாணத்தில் உள்ள பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில், வடக்கு மாகாணத்திற்கு நியமிக்கப்பட்ட ஆறாவது சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கே.ஈ.ஆர்.எல் பெர்னாண்டோ என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment