நானுஓயாவில் கனரக வாகனத்தில் மோதுண்ட சிறுமி ஸ்தலத்தில் பலி ; கனரக வாகனத்திற்கு தீ வைப்பு!


நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா நகரத்தில் இன்று காலை 7.15 மணியளவில் பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட 07 வயது பாடசாலை மாணவியான தெவ்மினி ஆகாஷா நுவரெலியா தலவாக்கலை நோக்கி சென்ற கனரக லொறி மோதி சிறுமி ஸ்தலத்திலே பரிதாபகரமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த பின் நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரி உரிய நேரத்திற்கு சம்பவ இடத்திற்கு வரவில்லை எனவும், இவரை இடமாற்றம் செய்ய கோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதை தொடர்ந்து பிரதேச வாசிகளும் தோட்ட மக்களும் இணைந்து பிரதான வீதியை இடை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு சம்பந்தபட்ட கனரக லொறியை பொதுமக்கள் தீ மூட்டினர். பின்னர் சம்பவத்தை பார்வையிட வந்த நுவரெலியா மாவட்ட நீதவான் அவர்களையும் பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. மேலும் பொலிஸார் உரிய நேரத்தில் பாதசாரி கடவையில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தால் இதுபோன்ற துக்ககரமான நிகழ்வு இடம்பெற்றிருக்காது, எனவே நானுஒயா பொலிஸ் பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்ய கோரி பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

நானுஒயா நகரை அண்டிய தோட்டப்புறங்களில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்தவர்கள் மற்றும் நகரத்திற்கு வேலைக்குச் செல்பவர்கள் என சுமார் 5000 இற்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். இதனால் ஹட்டன் பிரதான வீதி இன்று காலை 7.15 மணிமுதல் பி.ப. 2.00 மணிவரை போக்குவரத்துகள் எதுவும் இடம்பெறவில்லை. நகரத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. முச்சக்கரவண்டி சாரதிகள், வேன் சாரதிகள் என நகர பிரதேச வாசிகள் என அனைவரையுமே இவ்விபத்து சோகத்தில் ஆழ்த்தியது.

இவ்வார்ப்பாட்டக்காரர்களை அமைதிப்படுத்துவதற்காக பொலிஸார் எவ்வளவோ முயற்சி செய்தும் பலன் இல்லை. நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர், நுவரெலியா, தலவாக்கலை, லிந்துலை போன்ற பிரதேச பொலிஸ் அதிகாரிகள் அழைத்துவரப்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுவரெலியா மாவட்ட நீதவான் இந்திக ருவன் த சில்வா அவர்கள் ஸ்தலத்திற்கு வந்தபோது ஆர்ப்பாட்டக்காரர்கள் அவரை அனுமதிக்கவில்லை. அதிரடிப்படையினரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் விரட்டியடித்தனர். ஆனாலும் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகரின் விடா முயற்சியால் பொதுமக்களுடன் சுமூகமாக கதைத்து நீதவான் அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துவந்தார். பின் நுவரெலியா பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்கள் முன்னிலையில் நானுஓயா பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் அவருக்கு உதவி புரிந்த பொலிஸ் அதிகாரி அவருக்கும் சட்ட நடவடிக்கை எடுப்பதாக கையொப்பமிட்ட கடிதத்தை கையளித்தபின் அவ்வார்ப்பாட்டகாரர்கள் சடலத்தை நுவரெலியா வைத்தியாசாலைக்கு கொண்டுசெல்ல அனுமதித்தனர்.








Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment