சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 668 கடல் அட்டைகளை பண்ணை வீதியில் வைத்து யாழ்பாண பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இன்று அதிகாலை 2.45 மணியளவில் பண்ண வீதியால் கொண்டு செல்லும் போதே யாழ் பொலிஸார் இதனை கைப்பற்றினர்.
மேலும் இதனை உடைமையாக வைத்திருந்த இரு நபர்களும் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் இவ் கடல் அட்டைகள் பள்ளிக்குடா கடற்பரப்பில் பிடிக்கப்பட்டதாகவும் அங்கு விலை குறைவாக உள்ளதாலே யாழிற்கு கொண்டுவந்ததாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.



0 comments:
Post a Comment