கினிகத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களவால்தெனிய பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த, சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
களவால்தெனிய சிறிய மின் உற்பத்தி நிலையத்தின் அருகாமையில் கட்டட வேலைக்காக மணல் ஏற்றி சென்ற உழவு இயந்திரம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் வழியில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை கினிகத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment