மஹியங்கனை நகரில் அமைந்துள்ள பாதணி விற்பனை நிலையம் ஒன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 8.30 மணியளவில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீபரவலினால் குறித்த பாதணி கடை முற்றாக எரிந்து சம்பலாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புதியகாத்தான்குடி பகுதியை சேர்ந்த முஹம்மத் தாஜுதீன் என்பவருக்கு சொந்தமான கடையிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், தீக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மைகாலமாக நாட்டின் பல பகுதிகளிலும் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் இனம் தெரியாத சிலரால் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் சுமார் 20 இற்கு மேற்பட்ட கடைகளும் பல பள்ளிவாசல்களும்; தீ வைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய சம்பவம் பதிவாகியுள்ளது.




0 comments:
Post a Comment