இன்று (09/07/2017) ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில், குடத்தனை பகுதி மணற்காட்டு சந்தியில் (பழைய பொலிஸ்நிலையத்துக்கு அருகாமையில்) மணல் ஏற்றிவந்த ஹண்டர் ரக வாகனத்தின் மீது துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகினார். சம்பவத்தில் பலியானவர் துன்னாலைப் பகுதியைச் சேர்ந்த (19) வயதுடைய ஜே.டினேஸ் ஆவார்.
பலியானவரை பருத்தித்துறை மந்திகை அரச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. தகவலறிந்த மக்கள் மற்றும் உறவினர்கள் அங்கு பெருமளவில் கூடி வாக்குவாதங்களுக்கு உள்ளானதாகவும் பிறகு அங்கு வந்த பருத்தித்துறை பொலிசாரின் வாகனத்தின் மீதும், யாழ் (SOCO) பொலிசாரின் வாகனத்தின் மீதும் பொதுமக்களால் கல்வீசி தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பதட்டநிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதிக பொலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment