நயினை நாகபூஷணி அம்மன் தேர்த்திருவிழா!(PHOTO,VIDEO)


யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா, இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத் தேர் திருவிழாவில் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேரிழுத்தனர்.

கடந்த மாதம் 20ஆம் திகதி ஆரம்பமான நயினை நாகபூசனி அம்மன் ஆலய மகோற்சவத்தில் தொடர்ந்தும், சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று, அம்மனும் முருகனும் பிள்ளையாரும் உள் வீதி உலா வந்தனர்.

14ஆம் நாளான இன்று காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து கொடிக்கம்பத்திற்கு பூஜை நடைபெற்றது.

தொடர்ந்து, காலை 7 மணிக்கு நயினை அம்மன், பிள்ளையார், முருகன் ஆகியோருக்கு வசந்த மண்டப பூஜை நடைபெற்று, உள்வீதி உலா இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மூன்று கடவுளரும் தேரில் ஏற்றப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகஹரா சப்தத்துடன் முத்தேர்களும் வடமிழுக்கப்பட்டன.

யாழ். தவில் வித்துவான் பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர மற்றும் தவில் வாத்திய கச்சேரியுடன், முத்தேரும் வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.

 நன்றி - ரமணன்








Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment