இன்றைய ராசிபலன் - 12.03.2017


மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்- பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரம் செழிக்கும். புதுமை படைக்கும் நாள்.



ரிஷபம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்கு வீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். உழைப்பால் உயரும் நாள்.




மிதுனம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். தைரியம் கூடும் நாள்.




கடகம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.




சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.




கன்னி: குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். பணப் பற்றாக்குறை நீடிக்கும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும்.




துலாம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ் வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.



விருச்சிகம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.



தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.



மகரம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். எதிர்ப்புகள் அடங்கும் நாள்.



கும்பம்: பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத் தில் லாபம் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.




மீனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment