கச்சதீவில் ஆரம்பமான திருவிழாவில் இந்தியர்கள் எவரும் கலந்து கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குருமுதல்வர் யோசப்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கூட்டுத்திருப்பலியுடன் ஆரம்பமாகி மேற்படி திருவிழாவானது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
மேலும் இத்திருவிழாவில் வட.மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே, யாழ்.அரச அதிபர் என்.வேதநாயகன், இலங்கையின் முப்படையினரைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் இலங்கையின் பல பாகங்களையும் சேர்ந்த மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
எனினும் கடந்த காலங்களில் மேற்படி திருவிழாவானது இலங்கை – இந்திய மக்களால் இணைந்தே கொண்டாடப்பட்டு வந்தது. அத்துடன் இருநாட்டு மக்களும் தமக்குள்ளே ஐக்கியத்தினை வளர்த்தெடுக்கும் நிகழ்வாகவே அதனைக் கருதியிருந்தனர்.
அண்மையில் இந்திய மீனவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், பல போராட்டங்கள் இடம்பெற்று வந்த நிலையிலேயே மேற்படி திருவிழாவினைப் புறக்கணிப்பதாக இந்திய மீனவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





0 comments:
Post a Comment