மட்டக்களப்பில் 4 கைகுண்டுகள் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி கீச்சான்பள்ளம் எனும் கிராமத்தில் நான்கு கைக்குண்டுகள் இன்று (15.3.2017) புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கீச்சான்பள்ளம் கிராமத்தில், நான்கு கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

கீச்சான்பள்ளம் பிரதேசத்திலுள்ள காணியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த போது குறித்த கைகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவிதுள்ளனர். 


இந்நிலையில் நான்கு கைக்குண்டுகளும் பொலித்தீன் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், இவ்விடயம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment