யாழில் 9ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் நாளை மனிதச்சங்கிலிப் போராட்டமாக மாற்றம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இதுவரையில் அதிகாரத்தரப்பில் இருந்து தமக்கான உத்தியோகபூர்வமான முடிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை என்பதால் தமது போராட்டத்தின் வடிவத்தினை மாற்றியுள்ளதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உட்பட எந்தவொரு அரசியல்வாதிகளும் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அத்துடன் ஜனாதிபதியின் கவனத்திற்கு இதுவரை எடுத்துச்செல்லும் நடவடிக்கைகளில் எவருமே ஈடுபடாதது தமக்கு ஏமாற்றத்தையே அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு மேலும் அழுத்தத்தினை கொடுப்பதற்காகவே போராட்டத்தின் வடிவத்தினை மாற்றுவதாக வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன் இப்போராட்டத்தில் அனைத்து பட்டதாரிகளையும் கலந்து கொள்ளுமாறும், யாழ்.கல்விச்சமூகம் உள்ளிட்ட அனைவரும் போராட்டத்திற்கான ஆதரவினை வழங்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 comments:
Post a Comment