யாழில் பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களான கஜன் மற்றும் சுலக்சனின் நினைவாக இன்று (செவ்வாய்க்கிழமை) இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
‘வாழ்வின் பரிசைப் பகிர்ந்திடுங்கள்’ எனும் தொனிப்பொருளில் யாழ். பல்கலைக்கழக பொதுக் கட்டிடத் தொகுதியில் மேற்படி இரத்ததான முகாம் இடம்பெற்றது.
இவ் இரத்ததான முகாமில் அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் உட்பட பலர் இரத்ததானம் செய்திருந்தனர்.
யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களான கஜன் மற்றும் சுலக்சன், கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment