இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சுழல் பந்து வீச்சாளரும் உலகின் பந்து வீச்சு தரநிலையில் முதலிடம் வகிப்பவருமான அஸ்வின் இன்னுமொரு சாதனை படைத்துள்ளார்.
இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 4 போட்டிகள் கொண்டதான டெஸ்ட் தொடரில், இந்தியாவின் இன்றைய வெற்றிக்கு முக்கிய காரணமான அஸ்வின் 6 விக்கெட்டுக்களை தகர்த்தார்.
இதன்முலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர் எனும் உலக சாதனையை படைத்துள்ள இலங்கையின் முத்தையா முரளிதரனின் சாதனையொன்றை தகர்த்துள்ளார்.
அதிகமான 5 விக்கெட்டுக்கள் பெறுதிகளைப் பெற்ற வீரராகவும் முரளிதரன் திகழ்கின்றார் (67 தடவைகள் ) . இந்தப்பட்டியலில் 25 தடவைகள் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அஸ்வின், 9 வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
வேகமாக மிக குறைந்த போட்டிகளில் 25 தடவைகள் 5 விக்கெட்டுக்கள் பெறுதிகளை பெற்ற வீரராக, இதுவரை நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ஹாட்லி திகழ்கின்றார்.
ரிச்சர்ட் ஹார்ட்லி 62 போட்டிகளிலும், முத்தையா முரளிதரன் 63 டெஸ்ட் போட்டிகளிலும் இந்த சாதனையை படைத்துள்ள நிலையில், அஸ்வின் வெறுமென 47 வது போட்டிகளில் இந்த சாதனையை படைத்து, ஹார்ட்லி, முரளி ஆகியோரை முந்தியுள்ளார் அஸ்வின்.
இதுவரை மொத்தமாக 47 டெஸ்ட் போட்டிகளில் 269 விக்கெட்டுக்களை அஸ்வின் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment