ஏழு நாட்களில் மூன்று குழந்தைகளை பெற்ற தாய்..!



தாயொருவர் ஏழு நாட்கள் இடைவெளியில், மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ள அபூர்வ சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள இச்சாங் நகரத்திலுள்ள வைத்திய சாலையில் ஒரு தாய் ஆண் குழந்தையொன்றை பிரசவித்து ஆறு நாட்கள் கடந்தநிலையில் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு பற்றி தகவல் பகிர்ந்துள்ள  இச்சாங் நகர வைத்தியசாலையானது, ஒரு தாய் 6 நாட்கள் இடைவெளியில் குழந்தைகளை பிரசவித்தது இதுவே முதல் தடவை என குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் பிறந்த மூன்று குழந்தைகளும், அவர்களின் பிறப்பு நிலை உடல் பருமன் குறைவாக உள்ளதால், விசேட சிகிச்சை பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment