வாழ்வா சாவா என்று பயணிக்கும் பள்ளி மாணவர்கள்! (Photo)


குழந்தை பிறந்த உடனே கற்ற ஆரம்பித்துவிடுகிறது அதன் முதற் கல்வி அழுகை. இந்த உலகத்தில் தன்னை எவ்வாறு இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற பக்குவத்தை அடைய மனிதன் தொடர்ந்து கற்கிறான். இதற்கு பள்ளிக் கூடங்களில் கற்றுகும் கல்வியானது வாழ்க்கைப் பயணத்தைக் கடக்க உதவும் ஒரு சிறு கருவி.

அதேவேளையில் வாழ்க்கையில் அது முதன்மையான கல்வியும் கூட. கல்வி கற்றோருக்குச் செல்லும் இடம் எல்லாம் சிறப்பு என்பது நாமறிந்த ஒன்று. தான் படிக்காவிட்டாலும் தன் குழந்தை படித்து நல்ல நிலமைக்கு வர வேண்டும் என்பதுதான் பெற்றோரின் ஆசை. அதற்கு விலை எதுவாக இருந்தாலும் பிள்ளைகளின் கல்வியே முக்கியமான ஒன்றாக பல பெற்றோர்கள் கருதுகின்றனர்.

பிள்ளைகள் படிப்பதற்கு சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ஒரு சாரார் தொடர்ந்து போராடி வர, இருக்கும் வசதியை வைத்துக் கொண்டு படிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பல சிறுவர்கள் உலகத்தில் இருக்கின்றனர்.

தான் அனுதினமும் காடுகளையும் நதிகளையும் கடந்து பள்ளிக்குச் சென்று மீண்டும் பாதுகாப்பாக வீடு வந்து சேருவேனா என்பதே தெரியாமல் பல பிள்ளைகள் தோலில் புத்தகப்பையையும் மனதில் பயத்தையும் சுமந்துச் செல்கின்றனர்.

அவ்வகையில் உலகத்திலேயே பள்ளிக்குச் சென்று வர மிக ஆபத்தான பாதைகளைக் கடந்துச் செல்லும் மாணவ மணிகள் இருக்கும் நாடு எது என்பதை உங்களுக்காகப் பட்டியலிடுகின்றோம்!

மணிலா, பிலிப்பின்ஸ்


Taytay, Rizal மாகாணத்தில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளி முன்பு குப்பைக் கூளங்களைக் கொட்டும் இடமாக இருந்தது, இந்தப் பள்ளியைக் கட்டும்போது முறையான வாய்க்கால் அமைக்காததால் இங்கு மழை பெய்தாலே வெள்ளம் ஏற ஆரம்பித்துவிடும். இங்கு பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் தங்களின் கால்களில் ரப்பர் காலணிகளைப் போட்டுக் கொண்டு நாற்காலிகளை வரிசையாக அடுக்கி தற்காலிகப் பாலமாகப் பயன்படுத்துகின்றனர்.

இலங்கை


16- ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டையின் மதில் சுவர்களளைக் கடந்து அனுதிமனும் பள்ளிக்குச் செல்லும் இந்த மாணவர்கள். கரணம் தப்பினால் மரணம்தான்!



செங்க்ஜி, சீனா


Banpo ஆரம்பப்பள்ளிக்கு மலைகளைக் கடந்துச் செல்லு இந்த மழலைகள். பயங்கரமான இந்தப் பாதையில் மாணவர்கள் ஒரு வரிசையில் மிக கவனமாக நடந்துச் செல்ல வேண்டும்.


இயமலை


இயமலையில் அமைந்திருக்கும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் இந்தப் பனிப்பாறைகளை கடந்துதான் பயணம் செல்கின்றனர்.



லெபாக், இந்தோனேசியா


இந்தோனேசியா லேபாகில் இருக்கும் இந்த உடைந்தப் பாலம்தான் மாணவர்களின் கல்வியை இணைக்கும் பாலமாக இருந்தது. பாய்ந்தோடும் ஆறின் மீது கிழிந்து தொங்கும் கந்தல் துணி போன்ற பாலம்.


கொசோவா


பனியால் உறைந்திருக்கும் நதியைக் கடந்துதன் இந்த கிராமத்தில் இருக்கும் மாணவர்கள் தினமும் பள்ளிக்குச் செல்கின்றனர். இங்கு சீராக இல்லாத வானிலை காரணமாக இவர்களின் பயணம் என்றுமே ஆபத்தானதாகத்தான் உள்ளது. சில சமயங்களில் குளிர் -0 செல்சியசாக இருக்குமாம்.


Rio Negro, கொலம்பியா


கொலம்பியாவில் இருக்கும் இந்த Rio Negro ஆற்றை கடக்க அந்தரத்தில் பயணம் செல்லும் இந்த மாணவர்களுக்கு இது ஒரு அன்றாட வழக்கமாக உள்ளது.  


ரிசல், பிலிப்பின்ஸ்


ரிசால் மகாணத்தில் இருக்கும் ஒரு பள்ளிக்கு பாய்ந்தோடும் ஆற்றை ரப்பர் டியூப்பின் உதவியுடன் கடந்து செல்லும் இளம் சிறுவர்கள்! இவர்கள் புத்தகப்பையுடன் இந்த ரப்பர் டியூப்பை உடன் எடுத்துச் செல்கின்றனர்.


ஷாவான், சீனா


சாவான் கிரமத்தையும் வெளியுலகையும் இணைக்கும் ஒரே பாலம்தான் இது. பனி கொட்டி உடைந்துக் காணப்படும் இந்தப் பாலம்தான் பள்ளிக்குச் செல்ல மாணவர்கள் பயன்படுத்தும் பாலமும் கூட.


Beldanga, இந்தியா



ஆட்டோ ரிக்க்ஷாவில் குறைந்தது 20 க்கும் மேற்பட்ட பிள்ளைகள் ஏறி பள்ளிக்கு பயணம் செல்கின்றனர். குண்டும் குழியுமா இருக்கும் சாலையில் ஆட்டோ நிலைதடுமாறினால் பிள்ளைகளின் கதி?


கல்வி என்பது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமை என்றும் அது சரிசமமாகப் போய் சேரவேண்டும் என்பது நியதி. ஆனால் இங்கு தன்னுடைய வாழ்வாதாரத்தின் அடிப்படை வசதியே இல்லாமால் தவிக்கும் நாடுகளில் இருக்கும் சிறுவர்களின் நிலமை கேள்விக்குறி என்று சொல்வதைக் காட்டிலும் மயிரிலிழையில் உயிர் போகும் தருணத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment