நியூசிலாந்து – ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2 வது போட்டி இன்று நிறைவுக்கு வந்தது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று தொடரை சமன் செய்துள்ளது.
இன்றைய போட்டியில் நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி எமி சாட்டர்த்வைட் அரிய உலக சாதனை ஒன்றை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட்து.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ச்சியாக 137 *, 115 *, 123 ஓட்டங்கள் பெற்று சதமடித்திருந்த இந்த வீராங்கனை ,மகளிர் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் தொடர்ச்சியான 4 சதம் பெற்ற வீராங்கனை எனும் சாதனையை தனதாக்கினார்.
ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் வரலாற்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் சாதனை நாயகன் சங்கக்கார இவ்வாறு தொடர்ச்சியான 4 சதமடித்து அரிய உலக சாதனையை தன் வசம் வைத்திருக்கிறார்.
இந்தநிலையில் ,எவராலும் முறியடிக்கவே முடியாது எனக்கருத்தப்பட்ட இந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் இந்த நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியான எமி சாட்டர்த்வைட் ஈடுபட்டார்.
இன்று இடம்பெற்ற போட்டியிலும் அபார ஆற்றலை வெளிப்படுத்திய இவருக்கு மற்றைய வீராங்கனைகள் சரியான ஒத்துழைப்பை கொடுக்க தவறிய நிலையில் 47 வது ஓவரில் ஆட்டமிழந்தார்.
85 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்த இவர் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அரிய உலக சாதனையை தவறவிட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment