தமிழ்நாட்டில் கோகோ கோலா மற்றும் பெப்ஸி குளிர்பானங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரைப் பயன்படுத்துவதைத் தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அந்த நிறுவனங்கள் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பளித்திருக்கிறது.
நான்கு மாதங்களுக்குமுன், உள்ளூர் நுகர்வோர் குழு ஒன்று நிறுவனங்களின் தண்ணீர் பயன்பாடு விவசாயிகளுக்கு தீங்கிழைப்பதாக கூறி வாதிட்டதை அடுத்து, தமிழகத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுக்க இடைக்கால தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
உபரி நீரை மற்றுமே பயன்படுத்துவதாகவும், தாங்கள் நியாயமற்ற முறையில் குறிவைக்கப்படுவதாகவும் அந்த நிறுவனங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
கடந்த புதன்கிழமை முதல், தமிழகத்தில் வணிகர் சங்கங்களின் ஏற்பாட்டின்படி, கடைகளில் கோகோ கோலா மற்றும் பெப்ஸி குளிர்பானங்களின் விற்பனை நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment