இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலியில் இடம்பெற்று வருகின்றது.
இந்தப் போட்டியில் இளம் வீரர் குசல் மெண்டிஸின் அதிரடி ஓட்டக் குவிப்பில் இலங்கை அணி 494 ஓட்டங்கள் குவித்தது. பதிலுக்கு ஆடிய பங்களாதேஷ் அணி இன்றைய நாள் நிறைவுக்கு வரும் போது 2 விக்கெட்டுக்களை இழந்து 122 ஓட்டங்கள் பெற்றுக்கொண்டது.
இந்தப் போட்டியின் நடுவே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் அரங்கேறியது. குசல் மெண்டிஸ் துடுப்பாடிக் கொண்டிருந்தபோது சுபாஷிஸ் ரோய் பந்து வீசினார்.
இவரது பந்து வீச்சை சிக்சருக்கு குசல் மெண்டிஸ் விரட்டிய போது, அதனை பிடியெடுப்பதற்காக முனைத்த களத்தடுப்பாட்ட வீரர் பந்தை கைகளுக்குள் உள்வாங்கி கொண்டாலும், எல்லைக்கோட்டை தொட்டுவிட்ட காரணத்தால் அதனை நடுவர் சிக்ஸராக அறிவித்தார்.
ஆயினும் நடந்த எதுவுமே தெரியாதவராக பந்து வீச்சாளர் மகிழ்ச்சி ஆர்ப்பரிப்பில் துள்ளிக் குதித்தார், அதன் பின்னர்தான் அது ஆட்டம் இழப்பு இல்லை என்பதை அறிந்து கொண்டார்.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தனது பந்து வீச்சில் பெறப்பட்ட சிக்ஸருக்கே ஆர்ப்பரித்த வீரராக இப்போது சுபாஷிஸ் ரோய் நெட்டிசன்களால் வாட்டி எடுக்கப்படுகின்றார்.

0 comments:
Post a Comment