வவுனியா, காத்தார் சின்னகுளம் லக்ஸ்மன் வீதியைச் சேர்ந்த ரவீந்திரன் பிரவீனன் என்ற ஒன்றரை வயது குழந்தை கிணற்றில் தவறி வீழ்ந்து பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இச்சம்பவம் பற்றி அறியவருவதாவது இன்று (புதன்கிழமை) மதியம் குழந்தையின் பெற்றோர் வேலைக்குச் சென்றிருந்தனர். குழந்தை தனது அம்மம்மாவுடன் வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்ததாகவும், இவ்வேளையிலேயே குழந்தை கிணற்றில் வீழ்ந்து பலியானதாகவும் அறியப்படுகிறது.
எனினும் குறித்த கிணறு முழுமையாக நிர்மாணிக்கப்படாத பாதுகாப்பற்ற கிணறு என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் குழந்தையின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment