சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழில் பேரணி!


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ‘மாற்றத்தினை ஏற்க துணிவோம்’ எனும் தொனிப்பொருளில் யாழில் இன்று (புதன்கிழமை) பேரணியொன்று இடம்பெற்றது.

கியூடெக் கரிதாஸ் மற்றும் சர்வமத சகவாழ்வு அரங்கம் ஆகியன இணைந்து குறித்த பேரணியினை ஏற்பாடு செய்திருந்தது.

காலை 10.30 மணியளவில் ஆரம்பமான குறித்த பேரணியானது, யாழ்ப்பாணம் பஸ்தியன் சந்தியில் இருந்து அச்சகவீதி ஊடாக மத்தியூஸ் வீதி வழியாக கியூடெக் கரிதாஸ் நிறுவத்தில் நிறைவடைந்தது.

இந்த பேரணியில், கலந்துக்கொண்ட ஜேர்மனி நாட்டின் பெண் பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ஆண்களைப் போன்று சமவுரிமை வழங்க வேண்டும். இலங்கையில் பெண்களுக்கான உரிமை கிடைப்பதில்லை. அது வருத்தத்திற்குரியதென்று என கூறினார்.




Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment