லிந்துலை மெராயா பகுதியில் மினி சூறாவளி!


லிந்துலை  மெராயா பகுதியில் இன்று (புதன்கிழமை) மாலை 3.35 மணியளவில் ஏற்பட்ட மினி சூறாவளியினால் 33 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் சுமார் 150 க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

சூறாவளி ஓல்ட்ரிம் தோட்டத்துக்கு சொந்தமான கௌலினா பிரிவும் மற்றும் என்போல்ட் தோட்டப்பகுதியிலும் ஏற்பட்டுள்ளது.

இதில் கௌலினா தோட்டத்தில் 25 வீடுகளும், என்போல்ட் பகுதியில் 8 வீடுகளும் ஒரு கிறிஸ்தவ தேவாலயமும் சேதமடைந்துள்ளன.மின்கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட 33 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 150ற்கும் மேற்பட்டோர்களுக்கு நிவாரணங்களை வழங்க பிரதேச செயலகம், தோட்டநிர்வாகம், மற்றும் பொதுமக்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment