10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் உயிரிழக்கும் அபாயம்!

உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பசியால் உயிரிழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதாக ஐ.நா. நிறுவனம் தன் கவலையை வெளியிட்டுள்ளது.

பெரும் வறட்சியால் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நைஜீரியா, சொமாலியா, தென் சூடான் மற்றும் ஏமன் நாடுகளில், மக்கள் பசியால் உயிரிழக்கும் ஆபத்து அதிகமாக இருப்பதாக உரைக்கும் ஐ நா. நிறுவனம், இதுவரை, இந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுவந்த மனிதாபிமான உதவிகளும், பெருமளவில் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

பஞ்சத்தால் மக்கள் உயிரிழப்பதிலிருந்து காப்பாற்றப்பட்டு வருகின்றபோதிலும், அவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த, அதாவது, வேளாண்மைக்கும், கால்நடை பராமரிப்புக்கும் போதிய உதவிகளை வழங்கவேண்டும் என, அனைத்துலக நாடுகளிடம் விண்ணப்பித்துள்ளது, ஐ.நா. நிறுவனம்.

நைஜீரியாவில் விவசாயப் பயிர்களுக்கென தேவைப்படும் 2 கோடி டாலர் உதவித் தொகைக்கு, ஐ.நா.வின் FAO எனும், உணவு மற்றும் வேளாண் நிறுவனம் விண்ணப்பம் ஒன்றை வெளியிட்டபோதிலும், மூன்றில் ஒரு பகுதிக்கும் குறைவாகவே தற்போது கிட்டியுள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment