தமிழக மீனவர்கள் யாரும் கச்சத்தீவு விழாவுக்கு செல்லமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
இந்தநிலையில் தமிழக மீனவர் பிரிட்ஜோ நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளை சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து தமிழக மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
இதற்கமைய தமிழக மீனவர்கள் மத்தியில் அசாதாரண சூழல் நிலவுவதால் பதற்றம் நீடிக்கிறது.
மேலும், இலங்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழாவை முழுவதுமாக புறக்கணிப்பதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர் என, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, இலங்கை கடற்படையை கண்டித்து தஞ்சை மற்றும் நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கடலில் இறங்கி கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0 comments:
Post a Comment