வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவாக பேரணி! (PHOTO, VIDEO)


காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியாவில் 16ஆவது நாளாக மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு  போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சியின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி இன்று(சனிக்கிழமை) காலை 11 மணியளவில் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி கண்டி வீதிவழியாக காணமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டத்தினை மேற்கொண்டு வரும் இடத்திற்கு வந்தடைந்தது.

ஜனநாயக மாக்சிச லெனிசக் கட்சியின் கட்சியின் முக்கியஸ்தர் செந்தில்வேல் தலைமையில் இடம்பெற்ற இவ் பேரணியில், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பதில் என்ன, அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், பயங்கரவாத தடைச்சட்டத்தினை இரத்துச்செய், மைத்திரி ரணில் அரசே வாக்குறுதி என்னா? போன்ற வாசகங்ளைத் தாங்கியவாறு பேரணியில் கலந்து கொண்டிருந்தனர்.







Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment