ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது துடுப்பெடுத்தாட மைதானத்துக்குள் சென்ற வீரர் ஒருவர் கையில் துடுப்பாட்ட மட்டையை மறந்துவிட்டு சென்ற சம்பவம் எல்லோரையும் பரவசப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் பிறந்து ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றுள்ள பவாத் அகமட் என்ற சுழல் பந்துவீச்சாளர், விக்டோரியா அணிக்காக விளையாடி வருகிறார்.
மேற்கு ஆஸ்திரேலிய அணிக்கெதிரான உள்ளூர் போட்டியின்போதே இந்த விசித்திர சம்பவம் நடந்தது.
துடுப்பெடுத்தாட மைதானத்துக்குள் சென்ற பவாத் அகமட், மட்டையை மறந்து எல்லைக்கோட்டை கடந்து சென்ற பிறகுதான் கையில் துடுப்பு மட்டை இல்லாததை உணர்ந்தார்.
கிரிக்கெட் போட்டியொன்றின் போது தலைக்கவசம், கால்காப்பு, கையுறை எல்லாம் அணிந்து கொண்டாலும், முக்கியமான துடுப்பு மட்டையை மறந்து ஆடுகளம் புகுந்தமை வேடிக்கையே.


0 comments:
Post a Comment