யாழ் மத்திய கல்லூரிக்கும், பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான 111வது வடக்கின் பெரும் சமர் துடுப்பாட்ட போட்டிகள் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இதில் முதல் நாணயச்சுழற்சியில் முறையாக ஆரம்பிக்கப்பட்ட தொடரில் யாழ் மத்திய கல்லூரி துடுப்பெடுத்து ஆட தீர்மானித்துள்ளது.. 90 ஓவர் பந்துபறிமாற்றங்களின் அடிப்படையில் இவ் துடுப்பாட்டப்போட்டிகள் இடம்பெறுகின்றன.
இன்றைய தினம் 30 ஒவர் பந்துபறிமாற்றங்களின் அடிப்படையில் இவ் சுற்று போட்டிகள் இடம்பெறுகின்றன.
இவ் துடுப்பாட்ட போட்டியினை ஆரம்பித்துவைப்பதற்காக யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்,மற்றும் யாழ் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் ஆகியோர்கள் கலந்து கொண்டு இவ்விளையாட்டுப்போட்டியினை ஆரம்பித்துவைத்தனர்.
தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இப்போட்டியில் இன்றைய நேர ஆட்ட முடிவில் யாழ். மத்திய கல்லூரி 58 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஒட்டங்களையும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பரியோவான் கல்லூரி 33 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை பெற்றன.
படங்கள் - ஐ.சிவசாந்தன்






























































0 comments:
Post a Comment