சைட்டம் எனப்படும் மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர்களால் தலைநகர் கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொலிஸாரின் தடுப்பை மீறி ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைய முற்பட்டதையடுத்தே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக, கொழும்பு லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு அதனை அண்டிய வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அண்மைய காலமாக கொழும்பில் அதிகரித்துச் செல்லும் ஆர்ப்பாட்ட பேரணியால் பொதுமக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை நீக்கும் வகையில், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment