நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிற்பகல் வேளையில் பெய்து வரும் கடும் மழையினால் மண்சரிவு மழையினால் மண்சரிவு ஏற்படும் அபாயங்கள் காணப்படுகின்றது.
இன்று (திங்கட்கிழமை) அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை வேவர்லி தோட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.
குறிப்பாக பின்புறத்தில் உள்ள சமையல் அறைகள் முற்றாக சேதமடைந்துள்ளதோடு, அதிலிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர். இக்குடியிருப்பு பகுதியில் பின் புறத்தில் இருந்த பாரிய மண்மேடே சரிந்து விழுந்துள்ளது. இந்த வீட்டில் இருந்த 08பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தில் உள்ள 8 பேரை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கும், நிவாரண உதவிகளை பெற்று கொடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தோட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.







0 comments:
Post a Comment