குப்பை மேடு சரிவு : பலியானோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

கொலன்னாவை, மீதோட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த அனர்த்தத்தால் 145 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

மீட்புப்பணியில் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் இந்த குப்பை மேடு சரிவு காரணமாக கொழும்பில் இருந்து அகற்றப்படும் குப்பைகள் தேங்கும் நிலை எதிர்நோக்கப்படுகிறது.

இதனால் பாரிய நோய்கள் பரவுவதற்கான அச்சம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மீதொட்டமுல்ல குப்பை மேட்டினால் அதனை அண்மித்துள்ள குடியிருப்புகள் தொடர்ந்தும் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.


Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment