நேற்று(15) இலங்கைநேரப்படி பிற்பகல் நான்கு மணியவில் ஆரம்பமானது பதின்னான்காவது போட்டியில் சண் ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியானது கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் இடம்பெற்றது.
இதனடிப்படையில் முதல் களம் புகுந்த கொல்கத்தா ஆரம்பத்தில் இலக்குகளை இழந்தாலும் பின்பு களம்புகுந்த ரொபின் உத்தப்பாவின் அதிரடியால் மீண்டது. துடுப்பாட்டத்தில் கலக்கிய உத்தப்பா ஐந்து பவுண்டரிகள் நான்கு சிக்சர்கள் அடங்கலாக 39 பந்துகளில் 68 ஓட்டங்களை குவித்தார். இவருக்கு உறுதுணையாக ஆடிய மனிஸ் பாண்டி மூன்று பவுண்டரிகள் இரண்டு சிக்சர்கள் அடங்கலாக 46 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் புவனேஸ்வர் குமார் மூன்று இலக்குகளையும் நெகரா,பென் கட்டிங்,ரசிட் ஹான் தலா ஒவ்வொரு இலக்குகளை சாய்த்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சண் ரைசர்ஸ்க்கு ஆரம்பம் சிறப்பாக அமைந்தாலும் மத்திய வரிசை வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் 17 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. துடுப்பாட்டத்தில் சண் ரைசர்ஸ் சார்பில் யுவராஜ் மற்றும் வோணர் தலா 26 ஓட்டங்களையும் தவான் 23 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர். பந்துவீச்சில் வோக்ஸ் இரு இலக்குகளையும் பதான்,குல்தீப் யாதவ்,நரைன் மற்றும் போல்ட் தலா ஒவ்வொரு இலக்குகளையும் சாய்த்தனர்.
இறுதியில் கொல்கத்தா 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இதன்மூலம் கொல்கத்தா இத்தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இத் தோல்வியின் மூலம் சண் ரைசர்ஸ் அணி மேலும் ஒரு தோல்வியை ஈடன் காடனில் கொல்கத்தாவுடன் சந்தித்துள்ளது.இதுவரை சண் ரைசர்ஸ் எதுவித வெறறியையும் கொல்கத்தாவுக்கு எதிராக ஈடன் காடனில் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.போட்டியின் ஆட்டநாயகனாக ரொபின் உத்தப்பா தெரிவானார்.

0 comments:
Post a Comment