60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓய்வூதியத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்று சைக்கிளில் இலங்கையை சுற்றி உலாவரும் த.பிரதாபன் இன்று ஞாயிற்றுகிழமை காலை 9 மணியளவில் மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி தனது பயணத்தை தொடங்கினர்.
கல்லடி பாலத்தில் இருந்து ஆரம்பித்து காந்தி பூங்காவில் மட்டக்களப்பு மக்களால் கௌரவிக்கப்பட்டு மலர்மாலையும் அணிவிக்கப்பட்டது.
உலக நாடுகளில் வயது வந்தவர்களுக்கும் கிடைக்கும் அனைத்து சலுகைகளும் இலங்கையில் இருக்கின்ற வயதுவந்தவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வவுனியாவில் கடந்த 8ம் திகதி ஆரம்பித்த இந்த சைக்கிளில் இலங்கையை வலம்வரும் உலா மட்டகளப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



0 comments:
Post a Comment