அதிரடி வீரர்கள் பலரைக் கொண்ட மக்ஸ்வெல் தலைமையிலான பஞ்சாப் அணியை இலகுவாய் வீழ்த்தியது டெல்லி அணி!


10 வது IPL இந்த நேற்று(15) இடம்பெற்ற 15 வது போட்டியில் சாகிர் கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், அதிரடி வீரர் மக்ஸ்வெல் தலைமையிலான கிங்ஸ் xi பஞ்சாப் அணியும் போட்டியிட்டன.

டெல்லி பெரோஷா கோடலா மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சாகிர் கான் , முதலில் துடுப்பாடும் விருப்பை வெளியிட்டார்.

அதன்படி முதலில் ஆடிய இளம் வீரர்களைக் கொண்ட டிராவிட் பாசறையில் பயிற்றுவிக்கப்படும் டெல்லி அணி, 6 விக்கெட்டுக்களை இழந்து 188 ஓட்டங்கள் பெற்றது.

இங்கிலாந்தின் இளம் வீரர் சாம் பில்லிங்ஸ் அதிரடியாக விளையாடி 55 ஓட்டங்களையும், கடந்த போட்டியில் சதமடித்த சஞ்சு சாம்சன் 19 ஓட்டங்களையும்,கொரி ஆண்டர்சன் ஆட்டம் இழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.இறுதி 5 ஓவர்களில் டெல்லி அணி 68 ஓட்டங்கள் குவித்தது.

பதிலுக்கு ஆடிய பஞ்சாப் அணியில் அதிரடி வீரர்களான மக்ஸ்வெல், மில்லர், ஒயின் மோர்கன் போன்ற வெளிநாட்டு வீரர்கள் அணியிலிருந்து டெல்லியை வீழ்த்த முடியாது 9 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்கள் பெற்று 51 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அக்சர் பட்டேல் 44 ஓட்டங்களையும், மில்லர் 24 ஓட்டங்களையும், ஒயின் மோர்கன் 22 ஓட்டங்களையும், அணித்தலைவர் மக்ஸ்வெல் ஓட்டம் எதுவும் பெறாது மிஸ்ரா பந்திலும் ஆட்டம் இழந்தனர்.

பந்து வீச்சில் கிரிஸ் மோரிஸ் 3 விக்கெட்டுக்களையும், கம்மின்ஸ் ,நதீம் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

இன்றைய வெற்றி மூலமாக டெல்லி அணி, 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் பெற்றுள்ளது, பஞ்சாப் அணிக்கு 4 வது போட்டியில் கிடைத்த 2 வது தோல்வி இதுவாகும்.

இன்றைய போட்டியில் மும்பாய் , குஜராத் அணிகள் 4 மணிக்கும், பூனே , பெங்களூர் அணிகள் 8 மணிக்கும் மோதவுள்ளன.
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment