IPL போட்டிகளின் வரலாற்றில் வெற்றிகரமான அணித்தலைவர்களுள் ஒருவராகவும், சிறந்த வீரராகவும் வெளிப்பட்டுவரும் காம்பிர் தனது இதய விருப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் பிறந்து டெல்லி அணிக்காக ராஞ்சி கிண்ணப் போட்டிகளில் விளையாடும் காம்பிர், தனது இறுதிக் காலத்தில் தனது சொந்த அணியான டெல்லி அணியோடு IPL போட்டிகளில் விளையாடும் விருப்பை வெளியிட்டுள்ளார்.
IPL இன் முதல் ஏலத்தில் 725,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலத்தில் டெல்லி அணியால் காம்பிர் வாங்கப்பட்டார். அந்த பருவகாலத்தில் 14 போட்டிகளில் பங்கெடுத்து 524 ஓட்டங்கள் குவித்ததோடு 2010 ம் ஆண்டில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தலைவராகவும் காம்பிர் ்பெயரிடப்பட்டார்.
அதன்பின்னர் 2011 ம் ஆண்டு IPL ஏலத்தில் 2.4 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியால் பெறப்பட்டு அந்த அணியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
காம்பிர் தலைமையில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 இல் IPL மகுடத்தையும் கொல்கொத்தா அணி சூடியது.
இந்தநிலையில் இன்னும் நான் ஓர் டெல்லி பையன் என்றும் தனது IPL இறுதிக் காலத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இணைந்து விளையாட ஆவலாயுள்ளேன் என்றும் 35 வயதான காம்பிர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment