இசைஞானி இளையராஜாவின் இளையமகன் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் இசையில் யுவன் சங்கர் ராஜாவும், யுவனின் இசையில் இளையராஜாவும் நிறைய பாடல்கள் பாடியுள்ளனர். ஆனால், இருவரும் இணைந்து ஒரு படத்திற்குகூட இசையமைத்ததில்லை.
ஆனால், அது தற்போது கைகூடி வந்துள்ளது. ‘தர்மதுரை‘ படத்திற்கு பிறகு சீனுராமசாமி அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். இப்படத்தை யுவன் சங்கர் ராஜாவின் YSR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், யுவனும் தன்னுடைய அப்பாவுடன் இணைந்து இசையமைக்கவுள்ளதாகவும் பேசப்படுகிறது.
இவர்கள் இருவரும் இணைவது இதுதான் முதல்முறை என்றாலும், இளையராஜா ஏற்கெனவே ஒரு படத்தில் மற்றொரு இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். கடந்த 2004-ஆம் ஆண்டு வெளிவந்த ‘விஸ்வதுளசி’ என்ற படத்திற்காக இளையராஜாவும், எம்.எஸ்.விஸ்வநாதனும் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

0 comments:
Post a Comment