வங்காள தேசத்தில் தி டாக்கா 2வது டிவிஷன் கிரிக்கேட் லீக் (The Dhaka Second Division Cricket) தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய போட்டியில் அக்சியோம் அணியினரும் லால்மாட்டிய அணியினரும் மோதிய போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முதலி பேட்டிங் செய்த லால்மாடிய அணி 14 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 88 ஓட்டங்கள் எடுத்தது.
இதனால் 89 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அக்சியோம் அணி சார்பில் துவக்க வீரர்கள் களமிறங்கியுள்ளனர். அதன் படி லால்மாட்டிய அணி சார்பில் முதல் ஒவரை சுஜன் முகமது வீசியுள்ளார். இதில் 4 பந்துகள் வீசி 92 ரன்கள் கொடுத்து, அக்சியோம் அணியை வெற்றி பெற வைத்தார்.
கிரிக்கெட் உலகின் மிக மோசமான பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இவர் தன்னுடைய ஓவரில் 65 ஒய்டு மற்றும் 15 நோ பால் வீசியுள்ளார். அதன் பின்னர் நான்கு பந்துகளில் மூன்று பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 1990 ஆம் ஆண்டு கேண்டர்பரில் நடந்த முதல் தர போட்டியில் ஒரு ஓவருக்கு 77 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:
Post a Comment