யாழ்.மாவட்டத்தின் வெப்பநிலை 15ஆம் திகதிக்கு பின்னர் 36 பாகை செல்சியஸ் தொடக்கம் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என யாழ்.வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்.மாவட்டத்தில் அதிகரித்த வெப்பநிலையுடன் கூடிய காலநிலை நிலவி வரும்நிலையிலேயே யாழ்.வானிலை அவதான நிலையம் மேற்படி தகவலை கூறியுள்ளது.
இது தொடர்பாக வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி ரி.பிரதீபன் தகவல் தருகையில்,
இலங்கையின் மத்திய பகுதியில் உச்சம் கொண்டிருக்கும் சூரியன் படிப்படியாக நகர்ந்து நாட்டின் மேற்பகுதியை வந்தடைய உள்ளது. அதாவது யாழ்ப்பாணத்தை வந்தடைய உள்ளது. இதன்படி 15ஆம் திகதியளவில் யாழ்ப்பாணத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதனால் 15ஆம் திகதிக்கு பின்னதாக யாழ்.மாவட்டத்தில் வெப்பம் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
இதன்படி தற்போது 35 பாகை செல்சியஸ் ஆக உள்ள வெப்பநிலை 36 பாகை செல்சியஸ் தொடக்கம் 37 பாகை செல்சியஸ் வரையில் அதிகரிக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது.ள்

0 comments:
Post a Comment